சுர்குஜா,

அமேதி தொகுதியை கவனிக்க முடியாத ராகுல் கந்தியால் எப்படி நாட்டை ஆள முடியும் என்று நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஷ்கார் மாநிலம் சுர்குஜாவில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  நேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமேதி தொகுதியை தனது மகனுக்கு கொடுத்தார். தற்போது நான் அமேதி தொகுதியை எனது மகனிடம் கொடுத்துள்ளேன். அவனை பார்த்துக் கொள்ளுங்கள். அவர் நாட்டை ஆள வேண்டும் என்று மக்களிடம் கூறினார். நான் இப்போது ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன், அமேதியின் தொகுதியின் வளர்ச்சியை கவனிக்க முடியாத ராகுல் காந்தியால் எப்படி இந்த நாட்டை ஆள முடியும்? என்று கூறினார்.

மேலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய புத்தகம் குறித்து பேசிய நரேந்திர மோடி, டெல்லியில் தாய்-மகன் அரசு நடைபெறுகிறது என்று புத்தகம் தெரிவித்துள்ளது என்று கூறினார். பிரதம அலுவலகத்தையும் விமர்சித்த நரேந்திர மோடி இத்தகையவர்களிடம் இருந்து யார் நாட்டை காப்பாற்ற போகிறார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இவர்களை போன்றவர்களால் நாட்டை காப்பற்ற முடியாது என்றும் கூறியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிவரும் ராகுல் காந்தியையும் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் எந்த என்னவோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போன்று பேசுகிறார். டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியின் போது என்ன நடந்தது என்று மோடி கேள்வி எழுப்பியுள்ளார். “சிலநாட்களுக்கு முன்னார் ராகுல் காந்தி இங்கு வந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். தினசரி தொலைக்காட்சியை பார்த்திருப்பீர்கள். டெல்லியில் கற்பழிப்பு குறித்து செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ராகுல் காந்தி நீங்கள் டெல்லியில் இருந்தீர்கள். உங்களது அரசே டெல்லியில் நடக்கிறது. உங்களது ஆட்சி நடைபெற்ற நிலையிலே பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நான் என்னுடையை வேதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். மத்திய அரசு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறுவது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி முதல் 10 இடங்களில் 7 இடங்களை பெற்றது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் மற்ற மூன்று மாநிலங்கள் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள். பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் முதல் 10 இடங்களில் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை. ராகுல் காந்தி நீங்கள் தொடர்ந்து எவ்வளவு நாட்கள் இந்த பொய்யை கூறுவீர்கள்? கொள்ளையடிப்பதும், பொய்சொல்லுவதும் தான் காங்கிரஸ் கட்சியின் கோஷம் என்று நான் நம்புகிறேன் என்று மோடி கூறினார்.
 
